Skip to main content

சினிமா ஸ்ட்ரைக்...வேலை இல்லா தொழிலாளர்களுக்கு நன்கொடை அளித்த விஷால் 

Published on 06/04/2018 | Edited on 07/04/2018
vishal


கலாட்டா டாட்காம் இணைய தளத்தின் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு  சினிமா நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். அப்போது விழாவின் ஒரு பகுதியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விழா குழுவினர் ரூபாய்  10 லட்சத்தை நன்கொடையாக அளித்தார்கள். அதை நடிகர் கமல்ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பெற்று கொண்டார். இந்நிலையில் விஷால் பெற்ற 10 லட்சத்தை அதே மேடையில் வைத்து பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்து 10 லட்ச ரூபாயை வழங்கினார் விஷால். பின்னர் சினிமா வேலைநிறுத்தத்தால் சுமார் ஒரு மாத காலமாக வேலை இல்லாமல் இருக்கும் தொழிலாளர் நலனுக்காக இது அளிக்கப்பட்டதாக விஷால் அறிவித்தார். இதனால் அரங்கமே சிறிது நேரம் கர ஒலியில் அதிர்ந்தது.

சார்ந்த செய்திகள்