கரோனாவால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பாதிப்பில்லாத பகுதிகளில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் அதிகமாக கூட்டத்துடன் பணி நடைபெறும் சினிமா ஷூட்டிங்கிற்கு அரசு இதுவரை அனுமதி வழங்காமல் இருந்த நிலையில் படப்பிடிப்புகள் தொடங்க மத்திய அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. மேலும் அதில் பின்பற்ற வேண்டிய 33 வழிமுறைகளை வெளியிட்டுள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் தயாரிப்பாளர் சங்க தலைவரும், நடிகருமான விஷால் சமூகவலை தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்...
"ஷூட்டிங்கை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கிய மத்திய அரசுக்கு நன்றி & பாதுகாப்பான சூழலுக்கான அனைத்து தேவையான விதிமுறைகளையும் பின்பற்றி அனைத்து திரைப்பட படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும் என்று நம்புகிறேன்... மூவி ஷூட்டிங்கை மீண்டும் தொடங்குவதற்கான தேதியை எப்போது மாநில அரசு அறிவிக்கும் என்று எதிர்நோக்கியுள்ளேன்" என கூறியுள்ளார்.