லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள நிலையில் படத்தின் சக்சஸ் மீட் நேற்று மாலை நடைபெற்றது.
இவ்விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு "நாட்டுக்கோழி சூப், முருங்கைக்கீரை சூப், மாம்பழ ரோல், லிச்சி பழ சந்தேஷ், மட்டன் கீமா உருண்டை, சிக்கன் பிச்சு போட்ட வறுவல், வஞ்சிரம் மீன் வறுவல், இறால் தொக்கு, மட்டன் சுக்கா, சோள சீஸ் உருண்டை, பன்னீர் டிக்கா, மெக்சிகன் டாகோஸ், ஜலபேனோ சீஸ் சமோசா, கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, கொங்கு ஸ்பெஷல் சைவ பிரியாணி, தால்சா, ரைத்தா, விருதுநகர் பன் பரோட்டா, சிக்கன் பள்ளிபாளையம் கிரேவி, சைவ பள்ளிபாளையம் கிரேவி, இடியாப்பம், ஆட்டுக்கால் பாயா, சைவ குருமா, மதுரை மட்டன் கறி தோசை, முட்டை தோசை, மைசூர் மசால் தோசை, பொடி தோசை, வெங்காய தோசை, கொய்யாக்காய் சட்னி, கோவக்காய் சட்னி, நிலக்கடலை சட்னி, தேங்காய் சட்னி, சாம்பார், சாமை அரிசி தயிர் சாதம், மோர் மிளகாய், மாங்காய் ஊறுகாய், சுக்கு பால், ஐஸ்கிரீம், நறுக்கிய பழங்கள், பீடா போன்றவைகள் கொடுக்கப்பட்டு தடபுடலாக விருந்து நடத்தப்பட்டது. விருந்தினர்களுடன் கமல், லோகேஷ், அனிருத், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அமர்ந்து ஒன்றாக சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இவ்விழாவின் விருந்துக்கான உணவுகளை மெஹந்தி சர்க்கஸ் படத்தின் கதாநாயகன் மாதம்பட்டி ரங்கராஜின் நிறுவனம் சமைத்து கொடுத்துள்ளது.