Skip to main content

ஆரம்பிக்கலாங்களா...? மாஸான போஸ்டருடன் அப்டேட் கொடுத்த 'விக்ரம்' படக்குழு

Published on 11/03/2022 | Edited on 11/03/2022

 

vikram movie new poster goes viral

 

‘மாஸ்டர்’ படத்தின்  வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் கமல்ஹாசனை வைத்து 'விக்ரம்' படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய்  சேதுபதி, ஃபகத் ஃபாசில், அஞ்சாதே நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளை நிறைவு செய்த படக்குழு, அடுத்தகட்ட பணியில் கவனம் செலுத்தி வருகிறது.

 

இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு கனகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 14 ஆம் தேதி காலை 7 மணிக்கு 'விக்ரம்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கையில் கத்தியுடன் மாஸாக வரும் கமல்ஹாசனின் இந்த போஸ்டர் தற்போது பலரின் கவனத்தை பெற்று வருகிறது.

 


 

சார்ந்த செய்திகள்