அடுத்தடுத்து அதிரடியாய் வெற்றிப்படங்கள் கொடுத்து வரும் நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் பிஸியான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், ஆகிய படங்கள் வெளியாகவுள்ள நிலையில் இதில் முதியவராக விஜய்சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படம் அவருக்கு 25வது படமாக அமைந்துள்ளது. குறைந்த காலகட்டத்திலேயே 25 படங்களில் நடித்த விஜய் சேதுபதியை பாராட்டும் விதமாக பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஆயுத பூஜை சிறப்பு நிகழ்ச்சியாக விஜய் சேதுபதி 25 என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. கோபிநாத் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியின் படப்பிடிப்புகள் நேற்று நடந்துள்ளது. அப்போது ஒரு செக்மென்ட்டில் விஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். விஜய் சேதுபதிக்கு வாழ்த்து சொல்லவே சிவா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இவர்கள் இருவரும் சேர்ந்து ரசிகர்களுடன் செல்பி எடுத்து கொண்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.