![vjs](http://image.nakkheeran.in/cdn/farfuture/4wfROcwY2QiUH5nCxrdCt481ASbQdVJ6a1scl_z1JH8/1594785929/sites/default/files/inline-images/vjs-new_0.jpg)
'அலா வைகுந்தபுரமலோ' படத்தைத் தொடர்ந்து அல்லு அர்ஜூன் சுகுமார் இயக்கத்திலும் த்ரிவிக்ரம் இயக்கத்திலும் நடிக்க திட்டமிட்டிருக்கிறார். இதில் சுகுமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. கரோனாவால் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் படம் வெளியாக உள்ளது.
சமீபத்தில் அல்லு அர்ஜூனின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாக இப்படத்தில் அல்லு அர்ஜூனின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படத்தின் பெயர் 'புஷ்பா' என்பதை வெளியிட்டது படக்குழு. மைத்ரி சினிமாஸ் பெரும் பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்தில் போலந்து நாட்டைச் சேர்ந்த கியூபா என்பவர் ஒளிப்பதிவு செய்ய, டி.எஸ்.பி. இசையமைக்கிறார்.
முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் அல்லு அர்ஜூனும், ஹீரோயின் ராஷ்மிகா மந்தானாவும் நடிக்க இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதேபோல நடிகர் விஜய் சேதுபதி இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியானது. ஆனால், இதனைப் படக்குழு உறுதிசெய்யவில்லை.
இந்நிலையில் கரோனா அச்சுறுத்தலால் படங்களின் ஷூட்டிங் கடந்த மூன்று மாதங்களாக நடைபெறவில்லை. விஜய்சேதுபதியும் பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதால் 'புஷ்பா' படத்திற்கான அவருடைய தேதிகள் இல்லை என்பதால் இயக்குனர் சுகுமாரிடம் தான் நடிக்கவில்லை என்பதைத் தெரிவித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.