Skip to main content

'இந்த படம் அமைய நான் பாக்கியம் செய்துள்ளேன்' - விஜய் சேதுபதி  

Published on 18/07/2018 | Edited on 18/07/2018

 

vijay sethupathi

 

 

 

கைவசம் பல படங்கள் வைத்து தமிழ் சினிமாவின் பிசி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கும் படம்  'சீதக்காதி'. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்திற்கு பிறகு பாலாஜி தரணிதரனுடன் இரண்டாவதாக இணைந்துள்ளார் விஜய் சேதுபதி. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் வயதான கெட்டப்பில் அய்யா என்ற கதாபாத்திரத்தில் வரும் விஜய் சேதுபதியின் 'மேக்கிங் ஆஃப் ஐயா' என்ற வீடியோவை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இந்த வீடியோ வெளியான சில நாட்களிலேயே நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படம் குறித்து விஜய் சேதுபதி பேசியபோது.... "சீதக்காதி சிவாஜி கணேசன் சார் அல்லது கமல்ஹாசன் சார் போன்ற பெரிய நடிகர்களுக்கு பொருத்தமான ஒரு படம்.

 

 

 

ஆரம்பத்தில், பாலாஜி தரணிதரன் இந்த படத்தில் நடிக்க தமிழ் சினிமாவின் சில பெரிய நடிகர்களை நினைத்திருந்தார். ஆனால் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கைகளில் வேறு எந்த ஆப்ஷனும் இல்லாமல், அவர் என்னை அதில் நடிக்க வைக்க விரும்பினார். இந்த படத்திற்கு செய்ய வேண்டியதை சரியாக செய்து உள்ளேன் என்று நம்புகிறேன். இப்படத்தில் நான் ஒரு 80 வயதான நாடக கலைஞனாக நடிக்கிறேன். சீதக்காதி ஒரு ஆத்மார்த்தமான படம், அது கலைக்கு முடிவே இல்லை, சாகா வரம் பெற்றது என்ற செய்தியை சொல்லும். அது யாரோ ஒருவரின் அல்லது மற்றொருவரின் மூலம் வாழும். என் 25வது படமாக இந்த அற்புதமான படம் அமைவதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன் " என்றார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்