Published on 07/03/2020 | Edited on 07/03/2020
தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் படத்தை தொடர்ந்து அமீர்கான் லால் சிங் சத்தா என்னும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அத்வைத் சந்தன் இயக்குகிறார். அமீர்கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க மோனா சிங், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
![vjs](http://image.nakkheeran.in/cdn/farfuture/IOtoyuk2WJlLCUNs6UpKmoBafw0Ymx74UoS4Ia_1urE/1583565141/sites/default/files/inline-images/vjs_13.jpg)
இது 1994ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் டாம் ஹான்க்ஸ் நடிப்பில் வெளியாகி உலகம் முழுவதும் பல விருதுகளை குவித்த படமான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்தின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும்.
இந்த படத்தில் குறைந்த அளவினா ஐகூ உள்ளவர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கின்றார். இந்த கதாபாத்திரத்திற்காக சுமார் 20 கிலோ வரை உடல் எடையை குறைத்திருக்கிறாராம். அதேபோல விஜய்சேதுபதி தன்னுடைய கதாபாத்திரத்திற்காக சுமார் 25 கிலோ வரை எடையை குறைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.