![vijay sethupathi](http://image.nakkheeran.in/cdn/farfuture/6G_vdooFHtiXbF_tjUg64hQV4UJ4XI9v_bZKyNQ7YD4/1533347628/sites/default/files/inline-images/IMG_0208.jpg)
விஜய் சேதுபதி, சாயிஷா இணைந்து நடித்துள்ள 'ஜுங்கா' படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து தற்போது பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அப்போது நடிகர் விஜய் சேதுபதியும் விழாவில் கலந்துகொண்டு பேசும்போது... "இந்த படம் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கிறது. இது டான் படமாக இருந்தாலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு அப்ரோச் இருக்கிறது. எல்லா டான் படமும் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. இந்த படத்தில் நடித்திருக்கும் டான் கேரக்டர் கஞ்சத்தனமானவர் இல்லை. சிக்கனமானவர். தேவையில்லாமல் செலவு செய்பவரில்லை. அதாவது இந்த சப்ஜெக்டில் தான் நான் சிக்கனமானவராக நடித்திருக்கிறேன். ஆனால் படத்தின் பட்ஜெட் மற்ற விஷயங்களை பிரம்மாண்டமாகவே எடுத்திருக்கிறோம். இதில் பஞ்ச் இருக்கா.. இல்லையா.. என்று என்னிடம் கேட்பதை விட, அதை ரசிகர்கள் தான் தேர்தெடுக்கிறார்கள். நாங்கள் அதனை டயலாக்காகத்தான் பேசுகிறோம். ஜுங்கா என்றால் என்ன... என்பதை படத்தில் ஒரு காட்சியாகவே வைத்திருக்கிறோம். அதனால் இப்போது அதைப் பற்றி விரிவாக சொல்லமுடியாது. இந்த படத்தில் நடிக்கும் டான் கேரக்டருக்கும் ஒரு லட்சியம் இருக்கிறது. படத்தில் என்னுடன் யோகி பாபு நடித்திருக்கிறார். அவருடைய ஒன்லைன் பஞ்ச் என்னோட ஃபேவரைட். எந்த சூழலாக இருந்தாலும் அதனை எளிதாக கையாளக்கூடிய திறமையை நன்றாக கற்றுக் கொண்டிருக்கிறார்" என்றார்.