Published on 18/10/2018 | Edited on 18/10/2018
விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள 'சர்கார்' படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ள நிலையில் நடிகர் விஜய் அடுத்து யாருடன் இணைவார் என்று ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. விஜய் அடுத்து மீண்டும் அட்லீ உடன் இணைவார் என்று ஒருபுறம் கூறப்படும் நிலையில் இப்படத்திற்கான கதை விவாதத்தில் அட்லீ இருப்பதாகவும், அதற்குள் கிடைக்கின்ற கேப்பில் வேறு யாருடனாவது விஜய் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சில வருடங்களுக்கு முன் இயக்குனர் அமீர், விஜய்யை சந்தித்து இரண்டு கதையை கூறியுள்ளார். அதில் ஒரு படம் குடும்ப படம், மற்றொன்று அரசியல் படம். இந்நிலையில் விஜய் தற்போது இருக்கும் சூழலில் இதில் உள்ள அரசியல் கதையை தேர்ந்தெடுத்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.