வடசென்னை படத்திற்கு பிறகு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகியுள்ளது 'அசுரன்'. வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி.எஸ். தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு வேடத்தில் நடிக்கிறார். பூமணி எழுத்தில் வெளியான 'வெக்கை' நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் மாதம் 4ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன் படம் குறித்து பேசியபோது...
![vetrimaran](http://image.nakkheeran.in/cdn/farfuture/hNsEkV8G_z6ZldjOc9PEAE2yiZwRteVy-ad5nMQjKm0/1567062725/sites/default/files/inline-images/IMG_7567.jpg)
"என் படங்களில் ஒரு படத்தில் இருந்து இன்னொரு படத்திற்கான ரிலீஸ் டேட் இந்தப்படம் தான் சீக்கிரம் வருகிறது. அதற்கு முக்கியமான காரணம் தாணு சார். இந்தப்படம் பூமணி எழுதிய வெக்கை நாவலில் இருந்து இன்ஸ்பையர் ஆகி எடுக்கப்பட்டுள்ளது. பூமணி ஒருநாள் என்னை சந்திக்கவேண்டும் என்று அழைத்தார்.அவரை பார்க்க லே மெரிடியன் ஹோட்டலுக்கு சென்றேன். அப்போது அவர் வெக்கை நாவலை கொடுத்து படிக்க சொன்னார். அப்போது உருவானதுதான் 'அசுரன்'. வடசென்னை முடித்ததும் வடசென்னை 2 பண்ணலாமா என்று நினைத்தேன். பின் நானும் தனுஷும் இந்தப்படத்தை துவங்க முடிவு செய்தோம். நாம எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு விஷயத்தை நடத்திட முடியாது. அது தானாவே அமையும். இந்தப்படத்திற்கு அப்படி எல்லாம் அமைந்தது. பசுபதி கூட வொர்க் பண்ணணும்னு பல படங்களில் நினைத்தேன் தற்போதுதான் முடிந்தது. முதலில் இப்படத்தில் நான் முடிவுசெய்த நடிகர் கருணாஸ் மகன் கென் தான். ஒரு இன்ஸ்பெக்டர் கேரக்டருக்கு பாலாஜி சக்திவேல் சார் தான் சரியாக இருப்பார் என நினைத்து அவரை அணுகினேன். அவர் முதலில் நடிக்க மறுத்தார். பின் காம்பிராமைஸாக சிறப்பாக நடித்துக்கொடுத்தார். நரேன் ஒரு ஸ்ட்ராங்கான ரோல் செய்துள்ளார். கஷ்டங்களில் இருந்து எப்படி மீண்டு வரவேண்டும் என்ற ஒரு கேரக்டர் மஞ்சுவாரியாருக்கு. படத்தில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் சிறப்பாக இருக்கும்.
![vdzs](http://image.nakkheeran.in/cdn/farfuture/ykRCJNGCZ67UpIB2J3ulneusWrYFod15fnjjlji3RmY/1567062803/sites/default/files/inline-images/728x90.jpg)
தனுஷ் எந்த கேரக்டரில் நடித்தாலும் மெனக்கெடுவார். இந்தப்படத்திற்காக அவர் மீண்டும் அதிக மெனக்கெடலை எடுத்துக்கொண்டார். தேரிக்காடு சூட்டிங் ஸ்பாட்டில் பைட் சீக்வென்ஸுக்காக ரொம்ப சிரமப்பட வேண்டிய இருந்தது. ஆனால் அதை அசால்டாக செய்தார். இந்தப்படம் எல்லோரிடமும் இருந்து எடுத்துக்கொண்ட கமிட்மெண்ட் அதிகம். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ளார். என்னிடம் கதையே கேட்கவில்லை. சொன்ன நேரத்தில் சரியாக வருவார். இயக்குநர் ஏ.வெங்கடேஷ் அவர்களும் ஒரு கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளார். இப்படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்களின் அதிகபட்ச நடிப்பை கொடுத்தது எங்களின் வரம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் எப்போதுமே நான் நினைப்பதை அப்படியே செய்து கொடுப்பார். என் கிரியேட்டிவிட்டியை எந்த இடத்திலும் தடை செய்யவே மாட்டார். நானும் ஜிவி பிரகாஷும் வொர்க் பண்ணும் போது ரொம்ப ஜாலியாக இருக்கும். இந்தப்படத்திற்காக நாங்க நிறைய ஸ்டெடி பண்ணோம். படத்தில் ஆர்.ஆர் ரொம்ப புதுசா இருக்கும். ஆர்ட் டைரக்டர் நான் போதும் என்று சொன்னாலும் அதைவிட அதிகமாக செய்து தருவார். என் கூட எடிட் வேலை செய்வது ரொம்ப சிரமம். என் எடிட்டர் அதைப்புரிந்து கொண்டு வேலை செய்தார. அதைப்போல தான் ஸ்டண்ட் மாஸ்டரும். எனக்கு இருக்கக் கூடிய மிகப்பெரிய ஷீல்ட் தனுஷ்'' என்றார்.