Skip to main content

"இந்த படம் காவல்துறையின் மீதான விமர்சனம் என்பதைவிட..." - வெற்றிமாறன் விளக்கம்!

Published on 25/11/2020 | Edited on 25/11/2020
ghsrhshr

 

டெலிவிஷன் புகழ் சுரேஷ் ரவி, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா, மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காவல்துறை உங்கள் நண்பன்'. ஆர்.டி.எம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் நவம்பர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை போஃப்டா தனஞ்ஜெயன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து வெளியிடவுள்ள நிலையில் இப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அதில்....

 

"இந்த படத்தில் மிடில் க்ளாஸ் மக்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழலுக்குள் இருக்கிறோம் என்று ரொம்ப வலுவாகச் சொன்ன மாதிரி இருந்தது. இந்த மாதிரியான படங்கள் காவல்துறையின் மீதான விமர்சனம் என்பதைவிட, மக்களுக்கும் அவர்களுக்குமான இடைவெளியைக் குறைப்பதற்கான இடமாகப் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன். தொடர்ச்சியாகப் படங்களில் இப்படி வருகிறது என்றால், தினசரி வாழ்க்கையில் நாம் பார்ப்பதால்தான் இம்மாதிரியான படங்களில் வருகிறது. ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தில் நடக்கும் விஷயங்கள் ஏதோ ஒரு இடத்தில் நாம் அன்றாடம் பார்த்ததாகவோ அல்லது சந்த்தித்தாகவோ இருக்கிறது:" என்றார்.

 

சார்ந்த செய்திகள்