இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்துவருகிறார். இவர்கள் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார். வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் படமாக்கிய படக்குழு, தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளது. அங்கு 25 - 28 நாட்கள் வரை படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில், இயக்குநர் கெளதம் மேனன் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்காக இடங்களைத் தேர்வு செய்துவருகிறார். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.