Skip to main content

முழுவீச்சில் நடைபெற்று வரும் வசந்தபாலன் படத்தின் படப்பிடிப்பு!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

Vasanthabalan

 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வசந்தபாலன், தன்னுடைய பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து 'அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ்' என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார். இந்நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தை இயக்குநர் வசந்தபாலன் இயக்குகிறார். இப்படத்தில், 'கைதி', 'மாஸ்டர்' ஆகிய படங்களில் நடித்துப் பிரபலமான அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக துஷாரா நடிக்கிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

 

சில தினங்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பானது பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்