நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலுக்காக ரோகிணி தியேட்டர் உரிமையாளர் ரேவந்த் அவர்களை சந்தித்தோம். அப்போது அவரிடம் வாரிசு மற்றும் துணிவு பொங்கல் கொண்டாட்டம் எப்படி இருக்கும்? ஒரே நாளில் வெளியாகும் படங்களின் ரசிகர்களுக்காக என்ன மாதிரியான வேலைகளெல்லாம் செய்திருக்கிறீர்கள்? போன்ற கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு...
பொங்கலை முன்னிட்டு அஜித் நடித்த துணிவும் விஜய் நடித்த வாரிசும் திரைக்கு வர இருக்கிறது. இரு பெரிய நட்சத்திரங்களின் படங்கள் 9 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் வெளியாகிறது. துணிவும் வாரிசும் தனித்தனியாக வந்திருந்தாலும் நல்ல வசூல் ஆகியிருக்கும். தனியா ஒரு தியேட்டர் மட்டுமே வச்சிருக்கவங்களுக்குத்தான் எதாவது ஒரு படத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. எங்களுக்கு அப்படியில்லை. ரோகிணி தியேட்டரை பொறுத்தமட்டில் ஏழு ஸ்கிரீன் இருக்கு. தியேட்டருக்குள் உள்ள ஸ்கிரீன்களை பிரிச்சு படத்தை போடப்போறோம்.
தியேட்டர் கொண்டாட்டத்தின் போது சீட்ட உடைக்கிறவங்க, கண்ணாடியை உடைக்கிறவங்களை ரசிகர்களாகவே எடுத்துக்கிறதில்லை. அது ஒரு வித மனநோய் உள்ளவங்களாத்தான் பார்ப்போம். அந்தந்த ஸ்டார்களே அவர்களை ரசிகர்களாக எடுத்துக்கிறதில்லை. இந்த முறை முன்னை விட அதிக அளவு பவுன்சர்ஸ் இறக்குறோம். இந்த பகுதி போலீஸ் ஸ்டேசன்ல எக்ஸ்ட்ரா ஃபோர்ஸ் கேட்டு இருக்கோம். சிசிடிவி தியேட்டர் ஃபுல்லா வச்சிருக்கோம். தவறு செய்றவங்க மேல கண்டிப்பா நடவடிக்கை எடுப்போம்.
நள்ளிரவு 1 மணிக்கு துணிவு; விடியற்காலை 4 மணிக்கு வாரிசு திரையிட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆடலாம், கொண்டாடலாம். பாதிப்பை ஏற்படுத்தாமல் இரண்டு பேரின் ரசிகர்களும் சகோதரத்தன்மையுடன் இருக்க வேண்டும்.