![varalkshmi sabari movie release update](http://image.nakkheeran.in/cdn/farfuture/618echVV5Q1ez__38PU__8d9g1Bh2ldpSanm409p6ds/1713792790/sites/default/files/inline-images/173_20.jpg)
இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் தயாரிப்பில் நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் நடித்த படம் 'சபரி'. இப்படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), 'விவா' ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி போன்ற பல கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களோடு அஷ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா ஆனந்த், பிரமோதினி பேபி நிவேக்ஷா, பேபி கிருத்திகா மற்றும் பலரும் உள்ளனர்.
இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. மே 3, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.