![asad](http://image.nakkheeran.in/cdn/farfuture/KbM66sEUfkVMOFtDRgF9tZahdU8pzFHt823cpmN21HU/1589894023/sites/default/files/inline-images/actress-varalaxmi-sarathkumar-stills-from-pandem-kodi-2-.jpg)
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் திரையுலகமும் இதனால் முடங்கியுள்ள நிலையில் நடிகர், நடிகையர் வீட்டிலேயே இருந்து வருகின்றனர்.
இதற்கிடையே பாம்பன், சேஸிங், டேனி உள்ளிட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தன் திருமணம் குறித்து பரவும் செய்தி தொடர்பாக சமூவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...''எனக்குத் திருமணம் என்ற விஷயம் எனக்கு மட்டும் ஏன் கடைசியாக தெரிகிறது..?? ஹாஹாஹா அதே முட்டாள்தனமான வதந்திகள். என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். நான் திருமணம் செய்துகொண்டால் அதை கூரை உச்சியில் இருந்து கூச்சலிடுவேன். நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை" என கூறியுள்ளார்.