இலங்கையில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்காததால் மக்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும் ராஜபக்சே சகோதரர்கள் அரசியலிலிருந்து விலகவேண்டும் எனக் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் பலனாக ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராஜபக்சேவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் வீடு முழுமையாக எரிந்து நாசமானது. ஒட்டுமொத்த இலங்கையும் கலவரக் காடாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இலங்கையில் நடக்கும் பிரச்சனை குறித்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், "நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும், 'தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே... ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்சே எங்கே...ஓ சர்வதேச சமூகமே! இப்போதேனும் தமிழன் வீரத்திற்குத் தலைவணங்கு" என குறிப்பிட்டுள்ளார்.
நான்கு பக்கம்
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு#SriLanka— வைரமுத்து (@Vairamuthu) May 11, 2022