Skip to main content

"இது போதாது, நிலா வெறும் துணைக்கோள்" - சந்திரயான் 3 குறித்து வைரமுத்து

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

vairamuthu about chandrayan 3

 

இந்தியா சார்பில் நிலவின் தென் பகுதியை ஆராயக் கடந்த ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் பாய்ந்த சந்திரயான் - 3  நிலவின் ஈர்ப்பு விசைக்குள் செலுத்தப்பட்டு தற்பொழுது நிலவுக்கு மிக அருகில் சென்றது. தொடர்ந்து இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில் நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை படைத்துள்ளது.

 

தொடர்ந்து பலகட்ட நடவடிக்கைகளுக்கு பின் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் இறங்கி நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு இந்தியா என சாதித்தது சந்திரயான் - 3. நாடுமுழுவதும் இந்தச் சாதனை கொண்டாடப்பட்டு வருகிறது. 

 

இந்நிலையில் பாடலாசிரியர் வைரமுத்து சந்திரயான் - 3 வெற்றி குறித்து எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "பூமிக்கும் நிலவுக்கும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இந்தியா. ரஷ்யா அமெரிக்கா சீனா என்ற வரிசையில் இனி இந்தியாவை எழுதாமல் கடக்க முடியாது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கைகளைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்கிறோம். இது மானுட வெற்றி. அந்த நிலாவத்தான் நாம கையில புடிச்சோம் இந்த லோகத்துக்காக. இது போதாது நிலா வெறும் துணைக்கோள். நாம் வெற்றி பெற - ஒரு விண்ணுலகமே இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ராஜமௌலி, ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்களும் பாராட்டு தெரிவித்து எக்ஸில் பதிவிட்டுள்ளனர். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்