'பரியேறும் பெருமாள்' மற்றும் 'கர்ணன் படத்திற்குக் கிடைத்த வெற்றி காரணமாகக் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் அந்தஸ்திற்கு உயர்ந்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ். இவர், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கி வருகிறார். தனது படைப்புகளின் மூலம் தொடர்ந்து ஒடுக்கப்பட்ட மக்களின் குரலைப் பதிவு செய்து வரும் மாரி செல்வராஜ் ஒரு எழுத்தாளரும் கூட. மாரி செல்வராஜ் எழுதிய 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்', 'மறக்கவே நினைக்கிறேன்' என்ற இரு நூல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் மாரி செல்வராஜின் தனது மூன்றாவது நூலான 'உச்சினியென்பது' என்ற நூலை எழுதியுள்ளார். அவரின் முதல் கவிதைத் தொகுப்பாக உருவாகியுள்ள இந்நூல் கொம்பு பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது. இந்த நூலை வைகைப்புயல் நடிகர் வடிவேல் வெளியிட்டுள்ளார். நடிகர் வடிவேலு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.