Skip to main content

"வீரமும்-தியாகமும்... தமிழகத்தின் சமூகநீதி" - உதயநிதி பெருமை

Published on 10/08/2022 | Edited on 10/08/2022

 

udhayanidhi stalin appreciate vignesh shivan

 

சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா நேற்று (09.08.2022) கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது. முதல்வர் மு.க ஸ்டாலின் இப்போட்டி மற்றும் நிறைவு விழா தொடர்பாக பலரையும் பாராட்டியிருந்தார். மேலும் கலைநிகழ்ச்சிகளை பார்த்த மக்கள் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

 

ad

 

அந்த வகையில் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த நிகழ்ச்சி தொடர்பாக விக்னேஷ் சிவனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து உதயநிதி வெளியிட்டுள்ள பதிவில் "வீரமும்-தியாகமும் நிறைந்த இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழகத்தின் பங்கு மற்றும் சமூகநீதி பயணத்தை காட்சிப்படுத்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவுவிழாவில் நடைபெற்ற 'தமிழ் மண்' கலைநிகழ்ச்சி உணர்வுப்பூர்மாக அமைந்திருந்தது. ஒருங்கிணைத்து இயக்கிய விக்னேஷ் சிவன் மற்றும் குழுவினருக்கு அன்பும் நன்றியும்." என குறிப்பிட்டுள்ளார். உதயநிதியின் பதிவை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "வாய்ப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி சார். உங்கள் எண்ணமும் பார்வையும், இவை அனைத்தையும் சாத்தியமாக்கியது" என குறிப்பிட்டுள்ளார். 


 
மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய குழுவில் நடிகர் சிவகார்த்திகேயனின் மகள் ஆராதனாவும் இணைந்து பாடி பலரது கவனத்தை பெற்றார் .  

 

 

 

சார்ந்த செய்திகள்