Skip to main content

"இது இந்தியாவில் நடந்த உண்மை கதை" - இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ்

Published on 08/10/2022 | Edited on 08/10/2022

 

"This is a true incident story that happened in India" - Director dhanapalan Govindaraj speech

 

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தனபாலன் கோவிந்தராஜ் 'பருந்தாகுது ஊர்க்குருவி' என்ற தலைப்பில் ஒரு ஒரு படத்தை இயக்குகிறார். விவேக் பிரசன்னா, நிஷாந்த் ரூசோ, காயத்திரி ஐயர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். 'லைட்ஸ் ஆன் மீடியா' நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ரஞ்சித் உன்னி என்பவர் இசையமைக்கிறார்.  சர்வைவல் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்று வருகிறது. 

 

இது தொடர்பாக இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ், "கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்து அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம். இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளோம். ஊட்டி முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும்" பேசியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்