Skip to main content

திரிஷாவின் தீரா ஆசை நிறைவேறியது?

Published on 17/08/2018 | Edited on 17/08/2018
trisha

 

 

 

நடிகை திரிஷா முன்னணி கதாநாயகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்துவிட்ட நிலையில் இன்னும் ரஜினியுடன் இணைந்து நடிக்கவில்லை என்ற ஏக்கம் வெகுநாட்களாக அவருக்கு இருந்துவந்தது. இதை அவர் பல பேட்டிகளிலும் கூறியிருந்தார். இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் புதிய படத்தில் திரிஷாவும் நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிம்ரன் ஒரு கதாநாயகியாக நடித்து கொண்டிருக்கும் நிலையில், திரிஷா இன்னொரு நாயகியாக நடிப்பதகவும், ரஜினியின் இளவயது தோற்றத்துக்கு திரிஷா ஜோடியாக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வாய்ப்பின்மூலம் திரிஷா மிகுந்த மகிழ்ச்சியுடனும், உற்சாகத்தோடும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்