தென்னிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா.சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விலங்குகள் நல ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார்.
UNICEF-அமைப்பு பிரபலங்களில் ஒருவரைத் தூதராக தேர்ந்தெடுப்பார்கள்.அந்த வகையில் பல முன்னணி நடிகைகள் ஐநா அமைப்புகளின் கௌரவ தூதராகப் பதவியில் உள்ளனர்.
அண்மையில் நடிகை த்ரிஷா தென்னிந்திய UNICEF-அமைப்பு தூதராக நியமிக்கப் பட்டுள்ளார். தற்போது உலகம் முழுவதும் பீதியைக் கிளப்பி வரும் கரோனா வைரஸ் குறித்து அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் த்ரிஷா.தமிழக அரசாங்கத்தின் கரோனா விழிப்புணர்வு விளம்பரத்திற்காக கரோனா வைரஸ் குறித்தும், தனிமைப்படுத்துதல் குறித்தும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார்.
— Trish (@trishtrashers) April 7, 2020
அதில், “கோவிட்-19 அல்லது கரோனா வைரஸ் வேகமாகப் பரவக்கூடியது.மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அண்மையில் தமிழகத்திற்கு வந்தவர்கள் தங்களைத் தானே தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள்.இவ்வாறு செய்வதன் மூலம் உங்களை யாரும் டார்ச்சர் செய்யப்போவதில்லை,அது அவமானமும் இல்லை.அரசாங்கத்தின் விதிமுறைகளை முறியடிக்காதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.