![Trailer release of a Hollywood movie starring Dhanush](http://image.nakkheeran.in/cdn/farfuture/rtmiqehAapuBy0DJwq58S7vd3vK7n-w9x7ETn3DSx_Q/1653401788/sites/default/files/inline-images/bb1_2.jpg)
தனுஷ் ஹாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள திரைப்படம் 'தி கிரே மேன்'. அவெஞ்சர்ஸ்’ உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் இப்படத்தை இயக்குகின்றனர். இப்படம் 2009-ல் வெளியான 'தி கிரே மேன்' என்ற நாவலை தழுவி அதே தலைப்பில் உருவாகிறது. கிறிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் இவர்களுடன் இணைந்து தனுஷும் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்காக தனுஷ் சுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கி படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துள்ளார். சமீபத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் 'தி கிரே மேன்' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ஹாலிவுட் படங்களுக்கே உரித்தான ஆக்ஷன் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் நிறைய இடம்பெற்றுள்ள இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
The gray man trailer @Russo_Brothers pic.twitter.com/QW9hBs3uRC— Dhanush (@dhanushkraja) May 24, 2022