Skip to main content

மிஷ்கினுடன் மோதல்.... 'துப்பறிவாளன் 2' படத்தின் தற்போதைய நிலை என்ன?

Published on 17/06/2021 | Edited on 17/06/2021

 

vishal

 

கடந்த 2017ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி ,மாபெரும் வெற்றிபெற்ற படம் துப்பறிவாளன். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 எடுக்கப்படும் என்று அப்போதே அறிவிப்பு வெளியானது. அதன்பின் மிஷ்கின் சைக்கோ படத்தில் பிஸியாக, விஷாலும் வெவ்வேறு படங்களில் பிஸியாகிவிட்டார். சைக்கோ பட வெளியீட்டிற்குப் பிறகு, துப்பறிவாளன் 2 படத்தின் பணிகளில் மிஷ்கின் கவனம் செலுத்தத் துவங்கினார்.

 

கடந்த 2019ஆம் ஆண்டு துப்பறிவாளன் 2 படத்தின் ஷூட்டிங் லண்டனில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்றுவந்த நிலையில், இயக்குநர் மிஷ்கினுக்கும் விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, இப்படத்தில் இருந்து மிஷ்கின் விலக, எஞ்சியுள்ள படத்தை தான் இயக்க இருப்பதாக விஷால் அறிவித்தார். மேலும், துப்பறிவாளன் 2 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்றும் விஷால் தெரிவித்தார்.

 

இப்படத்திற்கான படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழு திட்டமிட்ட நிலையில், கரோனா இரண்டாம் அலை பரவல் ஏற்பட்டு உலகம் முழுவதும் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பல நாடுகளில் வெளிநாட்டினர் வருகைக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை கருத்தில் கொண்டு துப்பறிவாளன் 2 படத்திற்கான படப்பிடிப்பை அடுத்த வருடத்தின் துவக்கத்தில் தொடங்க விஷால் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்