தமிழ் சினிமாவில் சில காலங்களாக ட்ரெண்டில் இருந்துவந்த மதுரை சம்பந்தப்பட்ட படங்கள், முழு நீல காமெடி படங்கள், பேய் படங்கள், ஆகியவை மெல்ல மறைந்து தற்போது பார்ட் 2 காலம் ட்ரெண்ட்டில் இருந்து வருகிறது. இதில் பெரும்பாலும் வெற்றிபெற்ற படங்களின் இரண்டாம் பாகம் படங்கள் வெளிவந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றன.
இந்த 2ஆம் பாக படங்கள் எங்கு ஆரம்பித்தது என்று பார்த்தால் அதிசய மனிதன், நாளைய மனிதன், குரோதம் மற்றும் நான் அவன் இல்லை படங்கள் மூலமாக இருந்தாலும் இது தீவிரம் அடைந்து ட்ரெண்டாக மாறியது என்னவோ 2011ல் வெளியான 'முனி 2 காஞ்சனா' படம் மூலம் தான். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றதையடுத்து இந்த பார்ட் 2 படங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தன.
அதன்பின் வரிசையாக காஞ்சனா 2, காஞ்சனா 3, பாகுபலி 2, கோ 2, வெண்ணிலா கபடி குழு 2, சண்டக்கோழி 2, கலகலப்பு 2, அரண்மனை 2, கோலி சோடா 2, விஐபி 2, மாரி 2, ஜெய்ஹிந்த் 2, புலன் விசாரணை 2, பசங்க 2, டார்லிங் 2, ஜித்தன் 2, தில்லுக்கு துட்டு 2, தேவி 2, சென்னை 28 - 2, மணல் கயிறு 2, சென்னையில் ஒரு நாள் 2, திருட்டு பயலே 2, தமிழ்ப்படம் 2, சார்லி சாப்ளின் 2, சித்திரம் பேசுதடி 2, உறியடி 2, நீயா 2, களவாணி 2, கழுகு 2, ஆகிய படங்கள் தமிழ் சினிமாவில் படையெடுத்து, பலப்படங்கள் வெற்றிபெற்று சில படங்கள் கவனிக்கவும் வைத்தன.
இதுபோக தமிழின் சூப்பர்ஸ்டார் நடிகர்களான ரஜினிக்கு 2.0, கமலுக்கு விஸ்வரூபம் 2, இந்தியன் 2, அஜித்திற்கு பில்லா 2, விக்ரமிற்கு சாமி 2, சூர்யாவுக்கு சிங்கம் 1,2,3 படங்கள் என பெரிய ஹீரோக்களும் தங்கள் பங்கிற்கு சீக்குவல் படங்களான பார்ட் 2 படங்களில் நடித்துள்ளனர். இதில் கவனிக்கத்தக்க ஒரு அம்சமாக விஜய் மட்டும் இன்னும் எந்த பார்ட் 2 படத்திலும் நடிகைவில்லை. விஜய் தொடர்ந்து ஒரு பாக படத்திற்கே முன்னுரிமை கொடுத்து நடித்து வருகிறார்.
மேலும் முன்னணி நடிகர்களான தனுஷ், விஷால், ஜெயம் ரவி, மற்றும் இன்னும் சில நடிகர்களும் பார்ட் 2 படங்களில் நடித்து, அந்த படங்களும் வெளியாகியுள்ளன. மேலும் இவர்கள் நடிப்பில் 'சாட்டை 2 அடுத்த சாட்டை', 'தனி ஒருவன் 2', சதுரங்கவேட்டை 2, துப்பறிவாளன் 2, அப்பா 2, இரும்புத்திரை 2, நேற்று இன்று நாளை 2, கடவுள் 2, கும்கி 2, நாடோடிகள் 2, ராஜதந்திரம் 2, வடசென்னை 2, ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவர காத்திருக்கின்றன. மேலும் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றிபெற்ற படங்களின் பார்ட் 2க்கள் தயாரிக்க திரையுலகினர் திட்டமிட்டு வருகின்றனர்.