Skip to main content

'தளபதி 66' ; புதிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு

Published on 20/06/2022 | Edited on 20/06/2022

 

 'Thalapathy 66'; The film crew released the new announcement

 

விஜய், தற்போது பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ள இப்படத்தில் கவுரவ வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. குடும்ப பின்னணி படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் 'தளபதி 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி வருகிற ஜூன் 21-ஆம் தேதி மாலை 6.01-க்கு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.     

 

 

சார்ந்த செய்திகள்