அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் தீபாவளி ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இதனிடையே விஜய் தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கை தொடங்கிவிட்டார். இப்படத்தை எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் ஏற்கனவே விஜய்யை வைத்து மூன்று படங்கள் தயாரித்துள்ளது.
![vijay](http://image.nakkheeran.in/cdn/farfuture/17wqaULTaPM525XErlS8d4zkzl1XT-bVhbVAS9IQf6A/1570165458/sites/default/files/inline-images/vijay-with-vijay-sethupathy_0.jpg)
விஜய்யை வைத்து முதன் முதலாக லோகேஷ் கனகராஜ் இயக்க, கத்தி படத்திற்கு பின் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர்.
அக்டோபர் மாதத்தில் இப்படத்தின் ஷூட்டிங்கை தொடங்கி அடுத்த வருட கோடை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு, நேற்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது.
![sss](http://image.nakkheeran.in/cdn/farfuture/wHyJHKyp4epFJHaC8bRWdZEBfPVK8TBto9hfcF5aIyI/1570165842/sites/default/files/inline-images/336x90_17.jpg)
அதில் விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ், அனிருத், சாந்தனு, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் இப்படத்தில் ஆண்ட்ரியா மற்றும் 96 புகழ் கௌரி கிஷன் உள்ளிட்ட இரண்டு பிரபலங்களையும் இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என்று தகவல் வெளியாகி வருகிறது.