Skip to main content

பிளே ஸ்டேஷன் கேட்ட சிறுவன்... பதிலளித்த சோனு சூட்டுக்கு குவியும் பாராட்டு...

Published on 07/08/2020 | Edited on 07/08/2020
sonu sood

 

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியா முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளது. இதனால் பலரும் தங்களின் தினசரி வேலையை இழந்து தவித்து வருகின்றனர். 

 

தொடக்கத்தில் தங்களது வேலைக்காக வட இந்தியாவிலிருந்து, தென்னிந்தியாவிற்கு வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். அப்போது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டிருந்ததால் மிகவும் சிரமத்திற்கு ஆளான புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரம் கி.மீ. நடந்தே சொந்த ஊர் சென்றனர். 

 

அந்த சமயத்தில் சொந்த ஊர் செல்ல கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு உதவினார் நடிகர் சோனு சூட். சுமார் 20,000க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களை பேருந்துகள், ரயில், விமானம் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். 

 

இந்நிலையில், கரோனா ஊரடங்கால் தமிழகத்தை சேர்ந்த 90க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் சிக்கி தவித்து வந்தனர். இதை கேள்விப்பட்டு சோனு சூட் அவர்களும் வீடு திரும்ப உதவி செய்தார்.

 

இதனிடையே சோனு சூட்டின் ரசிகர் ஒருவர், தன்னுடைய நண்பர்கள் அனைவரும் வீட்டில் பிளே ஸ்டேஷன் கேம் இருப்பதால் விளையாடி வருகின்றனர். என்னிடம் இல்லை எனக்கு பிளே ஸ்டேஷன் வாங்கி தருகிறீர்களா என்று ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலளித்த சோனு, உன்னிடம் பிளே ஸ்டேஷன் இல்லை என்றால் நீ ஆசிர்வதிக்கப்பட்டவன். எதாவது புத்தகங்களை வாசி, அது வேண்டுமானாலும் வாங்கி தருகிறேன்” என்று தெரிவித்தார். சோனுவின் இந்த பதிலுக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

 

சார்ந்த செய்திகள்