ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் சிறந்த திரைப்படம், சின்னத்திரை கலைஞர்கள் மற்றும் திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தமிழக அரசு விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் இதுவரை அந்த விருதுகள் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில் தமிழக அரசு விருது வழங்கும் விழா வரும் 4ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்பட மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது.
இதில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம், மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம் என வழங்கப்படவுள்ளது. சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத் தலா 5 பவுன் தங்க பதக்கம் வழங்கப்படுகிறது.
அதேபோல், சின்னத்திரையில் சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 லட்சம் என 20 பேருக்கு வழங்கப்படவுள்ளது. மேலும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.
தமிழக அரசு விருது பெருவர்பவர்களின் விவரங்கள்;
சிறந்த நடிகர்கள்;
2009 - கரண் (மலையன்)
2010 - விக்ரம் (ராவணன்)
2011 - விமல் (வாகை சூடவா)
2012 - ஜீவா (நீதானே என் பொன்வசந்தம்)
2013 -ஆர்யா (ராஜா ராணி)
2014 - சித்தார்த் (காவியத் தலைவன்)
சிறந்த இயக்குநர்கள்;
2009 - வசந்தபாலன் (அங்காடித் தெரு)
2010- பிரபு சாலமன் (மைனா)
2011- ஏ.எல்.விஜய் (தெய்வத்திருமகள்)
2012- பாலாஜி சக்திவேல் (வழக்கு எண் 18/9)
2013- ராம் (தங்கமீன்கள்) 2014- ராகவன் (மஞ்சப்பை)
சிறந்த இசையமைப்பாளர்
2009 - சுந்தர் சி.பாபு(நாடோடிகள்)
2010 - யுவன்சங்கர் ராஜா(பையா)
2011 - ஹாரிஸ் ஜெயராஜ்(கோ)
2012 - இமான்(கும்கி)
2013 - ரமேஷ் விநாயகம்(ராமானுஜன்)
2014 - ஏ.ஆர்.ரகுமான்(காவியத் தலைவன்)
தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2009
முதல் பரிசு - பசங்க
இரண்டாம் பரிசு - மாயாண்டி குடும்பத்தார்
மூன்றாம் பரிசு - அச்சமுண்டு அச்சமுண்டு
தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2010
முதல் பரிசு - மைனா
இரண்டாம் பரிசு - களவாணி
மூன்றாம் பரிசு - புத்ரன்
தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2011
முதல் பரிசு - வாகை சூடவா
இரண்டாம் பரிசு - தெய்வத்திருமகள்
மூன்றாம் பரிசு - உச்சிதனை முகர்ந்தால்
சிறப்பு பரிசு - மெரினா
தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2012
முதல் பரிசு - வழக்கு எண் 18/9
இரண்டாம் பரிசு - சாட்டை
மூன்றாம் பரிசு - தோனி
சிறப்பு பரிசு - கும்கி
தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2013
முதல் பரிசு - ராமானுஜம்
இரண்டாம் பரிசு - தங்கமீன்கள்
மூன்றாம் பரிசு - பண்ணையாரும் பத்மினியும்
சிறப்பு பரிசு - ஆள்
தமிழக அரசு விருது - சிறந்த படங்கள் 2014
முதல் பரிசு - குற்றம் கடிதல்
இரண்டாம் பரிசு - கோலி சோடா
மூன்றாம் பரிசு - நிமிர்ந்து நில்
சிறப்பு பரிசு - காக்கா முட்டை