Skip to main content

“டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம்”- தமிழ்ப்படம் இயக்குனர்

Published on 11/05/2019 | Edited on 11/05/2019

ஐபில் சீசன் -12 போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கெனவே இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக மும்பை அணி தகுதி பெற்ற  நிலையில், மற்றொரு அணியை தீர்மானிக்கும் போட்டி நேற்று ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அதில் டெல்லி அணி மற்றும் சென்னை அணி மோதின. அந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிப் பெற்றது. இதன் மூலம் இறுதிப்போட்டியில் மீண்டும் மும்பை அணியுடன் மோதவுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
 

cs amudhan

 

 

தமிழ்ப்படம் மற்றும் தமிழ்ப்படம்-2 ஆகிய படங்களை இயக்கிய சி.எஸ். அமுதன் சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகர் என்று அவருடைய ட்வீட்களை பார்க்கும்போதே தெரிந்துக்கொள்ளலாம்.


இந்நிலையில் நேற்று சிஎஸ்கே வெற்றிப் பெற்றதை அடுத்து, “டெல்லிக்கு ஒரு நாளும் அடி பணிய மாட்டோம்” என்று ட்வீட் செய்துள்ளார். பலரும் இது டெல்லி அணியை அவர் கிண்டல் செய்யவில்லை அரசியல் ரீதியாக கிண்டல் செய்திருக்கிறார் என்று சொல்கிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்