Skip to main content

'கடைக்குட்டி சிங்கம்' படத்தை காபி அடித்த தமிழக அரசு ! 

Published on 23/07/2018 | Edited on 23/07/2018
karthi

 

 

 

சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், கார்த்தி நடிப்பில், இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்றுள்ள குடும்ப திரைப்படம் 'கடைக்குட்டி சிங்கம்'. இப்படத்தில் விவசாய நிலத்திலிருந்து வயதான மூதாட்டி ஒருவர் மூட்டைகளோடு வந்து பேருந்தில் அதை ஏற்றுவதற்காக காத்திருப்பார். அப்போது பேருந்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுவிடுவார். நாயகன் கார்த்தி பேருந்தை இடைமறித்து விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றி கூறி அந்த பாட்டியை பேருந்தில் விவசாய பொருட்கள் கொண்ட அந்த மூட்டையோடு ஏற்றுவார். இதன் பிரதிபலிப்பாக தமிழக அரசு தற்போது இலவசமாக விவசாய பொருட்களை பேருந்தில் ஏற்றலாம் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இதனை அறிந்த படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

 

 

 


 

சார்ந்த செய்திகள்