Skip to main content

 சூர்யா, கார்த்தி, விவேக், ஜோதிகா- நியமித்த முதல்வர் எடப்பாடி

Published on 24/08/2018 | Edited on 24/08/2018
cinema

 

வருகின்ற 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் சுற்றுச்சூழலை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனை தடுக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்ட இலாகாவும் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேற்று தமிழக முதல்வர்பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்கிற இணையதளத்தை தொடங்கினார். அதுமட்டுமில்லாமல், பிளாஸ்டிக்கை தவிர்ப்பது எப்படி, மறுசுழற்ச்சி முறை சம்மந்தமாக விழிப்புணர்வு குறும்படங்களை வெளியிட்டார்.

 

பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு என்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் விளம்பர துதுவர்களாக நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விவேக், ஜோதிகா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்