![surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/r0-6Qbxa3KjK_NkIZcnR-9bAzuMiXT50dQZXUzxBtg8/1537189144/sites/default/files/2018-09/dmzfc95vsaup91_.jpg)
![surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/3SASxVBP_9zXoDS1wnK0NqTlMO1enD1LTwanNhhEgCY/1537189146/sites/default/files/2018-09/dhvc4euuwaa8xhu.jpg)
![surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/K7BHJOomXxkMc8vEkYVt1lMhi7ttikIcnXdQTqYOzjo/1537189146/sites/default/files/2018-09/dmzfdopuuaiaasn.jpg)
![surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/TaKeoMgGHSyVYJDgIbGVpR9ThhoAYYz4A6CH3Lyw33A/1537189146/sites/default/files/2018-09/dnh1uuuu8aan4n5.jpg)
![surya](http://image.nakkheeran.in/cdn/farfuture/UO8jaDqznn2ozsc5QojMG--H_i9lfdjTo-Usvb5doBQ/1537189146/sites/default/files/2018-09/dnh1uuvu8ae8hpx.jpg)
சூர்யா செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் 'என்.ஜி.கே' படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படம் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 'என்.ஜி.கே' படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் இந்த முடிவை எடுத்ததாக நடிகர் சூர்யா சமீபத்தில் ஒரு விழா மேடையில் பேசியபோது அறிவித்தார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் நடிகர் சூர்யா கே.வி.ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இதற்காக அவர் புதிய கெட்டப்பிற்கு மாறி படப்பிடிப்பு தளத்தில் நடித்துக்கொண்டிருக்கும் காட்சிகளின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் சமீபத்தில் கசிந்துள்ளது. மேலும் சூர்யாவுடன் மோகன்லாலும் இப்படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சூர்யா மோகன்லாலுடன் உள்ள புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.