Published on 09/04/2018 | Edited on 09/04/2018
![surya kv](http://image.nakkheeran.in/cdn/farfuture/qTCoCrDDnMpR4v5wO1XrlcnXvcprxmUk5NzhTHLWaEY/1533347616/sites/default/files/inline-images/16-1350382432-anand-4.jpg)
என்.ஜி.கே படத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் சூர்யா அடுத்ததாக கே.வி. ஆனந்த் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகிய நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க நியூயார்க், பிரேசில், மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் நடத்த பட குழு திட்டமிட்டுள்ளது. படத்தின் நாயகி யார் என்று விரைவில் அறிவிக்க உள்ள நிலையில் தற்போது நடக்கும் வேலைநிறுத்தம் காரணாமாக படப்பிடிப்பை நடத்தமுடியாத காரணத்தால் இருக்கின்ற நேரத்தில் இப்படத்திற்கு இசையமைப்பதற்காக இயக்குநர் கே.வி.ஆனந்துடன் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் லண்டன் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.