சென்னையிலுள்ள தனியார் கல்லூரியில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளை துவங்கப்படதன் 10ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூர்யா, அவரின் தந்தை சிவக்குமர், சூர்யாவின் தம்பி கார்த்தி மற்றும் அகரம் அறக்கட்டளையில் பயின்ற மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கப்பட்டது.
இவ்விழாவில் சூர்யா பேசுகையில், “குடும்பம், சமூகம் மற்றும் செய்யும் தொழில் ஆகிய மூன்றுக்கும் மாணவர்கள் சரிசமமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் யாரும் சுயம்பு இல்லை. வெளியிலிருந்து நிறைய எடுத்திருக்கிறோம். அதற்கெல்லாம் நாம் திருப்பி தர வேண்டும்.
நல்லா நடிப்பேன், இன்னும் நிறையா சம்பாதிப்பேன். அதை வைத்து இன்னும் நிறையா செய்வேன். இந்த அறக்கட்டளையின் சக பயணியா என்னோட பங்கு எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.
நடிப்பின் மூலம் கூடுதலாக சம்பாதித்து அகரம் அறக்கட்டளையின் வாயிலாக இன்னும் அதிகமாக உதவுவேன். இந்த சமூகத்தை பற்றியும் சிந்திப்பதுதான் வாழ்க்கை. இன்னும் சில குழந்தைகள் பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் சாதிப் பெயரை சொல்லி திட்டுவது போன்ற நிகழ்வுகள், எனக்கு படிப்பு சொல்லித்தர ஆள் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதுபோல நிறைய பிரச்சனைகள் மாணவர்களுக்கு இருக்கிறது. அதெல்லாம் உங்களுக்கு தெரியும். அதனால் அந்த நேரத்த அந்த பள்ளிக்கூடங்களில் செலவிடுங்கள்” என்றார்.
அறக்கட்டளை நிர்வாகிகளின் அர்ப்பணிப்பு உணர்வை குறிப்பிட்டு பேசிய சூர்யா, குடும்பத்தைக் காட்டிலும் அகரம் அறக்கட்டளைக்காக அதிக நேரம் செலவழிக்கும் ஜெயஸ்ரீ-யின் குழந்தையை ஆரத்தழுவி கண்கலங்கினார்.