அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை முடிவெடுக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாகவும் பல திருப்பங்களுடன் நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுகிறார். ட்ரம்ப்பை எதிர்த்து ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் நிலவரப்படி, ஜோ பைடன் முன்னிலை பெற்றிருக்கிறார். இன்னும் முக்கிய மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும், பல லட்சம் தபால் வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படவில்லை. இதனால் அமெரிக்காவின் அடுத்த அதிபர் யார் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்கிற சூழல் ஏற்பட்டுள்ளது.
ஒரு சில மாகாணங்களில் ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்று வருவதால் இது திருப்புமுனையாக இருக்குமா என்று எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க பிரஜையான நடிகை சன்னி லியோன், லாஸ் ஏஞ்சல்ஸில் இன்று தனது கணவருடன் வாக்கு வங்கிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு, அந்தப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், அந்தப் பதிவில் சஸ்பென்ஸ் என்னைக் கொல்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.