செல்வராகவன் இயக்கும் 'நானே வருவேன்' படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ் தற்போது 'வாத்தி' படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திக் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். 'சத்யா ஜோதி ஃபிலிம்ஸ்' சார்பாக தியாகராஜன் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தீப் கிஷான் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இதனை படக்குழு உறுதி செய்துள்ளது. இப்படத்தின் சந்தீப் கிஷானின் கதாபாத்திரம் தனுஷுக்கு இணையான வலுவான கதாபாத்திரமாக இருக்கும் என கூறப்படுகிறது. இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த மாநகரம் படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு சில தமிழ் படங்களில், தெலுங்கு படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.