சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாண போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி பின்னர் டைரக்டர்கள் சேகர் கம்முலு, கோனா வெங்கட், கொரடாலா சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம், நகைச்சுவை நடிகர் விவா ஹர்ஷா, பாடகர் ஸ்ரீராம் சந்திரா, தயாரிப்பாளர் வெங்கட் அப்பாராவ் ஆகியோர் பெயர்களையும், சர்ச்சையான படங்களையும் சமூகவலைத்தளங்களில் 'ஸ்ரீலீக்ஸ்' வாயிலாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர் தன் பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த பவன் கல்யானை கடுமையாக சாடி தன் செருப்பை எடுத்து தன்னை தானே அடித்து கொண்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய அவர் தெலுங்கு நடிகை ஜீவிதா மீதும் பாலியல் புகார் கூறினார். இதனையடுத்து தெலுங்கு நடிகர் சங்கம் ஸ்ரீரெட்டியை நீக்கி வைத்து, அவருடன் யாரும் நடிக்க கூடாது என்று தடை போட்டது. பின்னர் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவாக மனித உரிமை ஆணையம் மற்றும் மகளிர் சங்கங்கள் இறங்கியதால் அவர் மீதான தடையை நடிகர் சங்கம் நீக்கியது.இந்நிலையில் தற்போது சமூக சேவை பணிகளில் ஸ்ரீரெட்டி தீவிரமாக ஈடுபட தொடங்கி உள்ளார். பெண்கள் அமைப்புகள் நடத்தும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து நடைபெறும் கருத்தரங்குகளிலும் பேசி வருகிறார். இந்நிலையில் ஆந்திரா ஸ்ரீசைலம் பகுதியில் உள்ள கண்மாயில் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற பெண்கள் பலர் வேலை செய்து வந்தனர். அந்த வேலையை திடீரென்று நிறுத்தி அவர்களை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். இதை கண்டித்து அந்த பெண்களுடன் சேர்ந்து ஸ்ரீரெட்டி போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் விரைவில் அரசியல் கட்சி ஒன்றில் ஸ்ரீரெட்டி இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.