Skip to main content

"சூரரைப் போற்று குறித்து அந்த மூவரும் அமர்ந்து பேசி முடிவெடுக்கவேண்டும்" - ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் அறிக்கை!

Published on 28/08/2020 | Edited on 28/08/2020
vjvj

 

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் நேரடியாக ஓ.டி.டியில் வருகிற அக்டோபர் 30ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

"சூர்யா நடித்துள்ள 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓ.டி.டியில் வெளிவருவது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திலோ, நடிகர் சங்கத்திலோ தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாத இன்றைய அசாதாரணமான சூழ்நிலையில் இது விஷயமாக யார், யாரிடம் பேசுவது என்ற குழப்பமான சூழ்நிலை உள்ளது. இதில் திரைப்படத் தயாரிப்பாளர்களின் நிலை குறித்தும், பட வெளியீட்டில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் ஆன்லைன் டிக்கெட்டிங் மற்றும் வி.பி.எஃப் குறித்தும் நிரந்தரத் தீர்வு காண திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், திரைப்பட நடிகர்கள் உள்ளிட்ட முத்தரப்பினரும் அமர்ந்து பேசி, எல்லோருடைய கருத்தையும் அறிந்து சுமுகமான நல்ல முடிவினை எடுத்து அதை நடைமுறைக்குக் கொண்டு வந்து செயல்படுத்தித் திரை உலகம் செழிக்க திரையரங்க உரிமையாளர்கள் உட்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்