காமராஜ், முதல்வர் மகாத்மா படங்களை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி வாழ்க்கை வரலாற்று குறித்த ஆவணத் திரைப்படம் ஒன்றை ‘ஸ்ரீ ரமணா’ என்ற பெயரில் தயாரித்துள்ளது. இப்படம் வரும் தீபாவளியன்று இணையத்தளத்தில் வெளியாகவுள்ளது.


திருவண்ணாமலையில் உள்ள ரமணாஸ்ரம நிர்வாகத்தினர் உதவியோடு ரமண மகரிஷி குறித்த பல்வேறு அரிய செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவுகளை பெற்று இந்த ஆவணப்படத்தில் ஆங்காங்கே தக்க இடங்களில் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் காந்தி அடிகள் திருவண்ணாமலை வந்திருந்த போது அவர் பகவான் ரமண மகரிஷியை சந்திக்க இயலவில்லை. அதற்கான காரணமும் காட்சி வடிவில் படமாக்கப்பட்டுள்ளது. இதில் நடிகர் தீனதயாளன் ரமண மகரிஷி வேடத்தில் நடித்துள்ளார். காமராஜர் மற்றும் காந்தி பற்றிய திரைப்படங்களைத், தயாரித்து இயக்கியுள்ள அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.