நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாகத் தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இந்நிலையில் கரோனா விழிப்புணர்வு குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு சமூகவலைத்தளத்தில் யோசனை தெரிவித்துள்ளார். அதில்...
"கரோனா வைரஸ் அருகிலுள்ள மற்றும் அன்பானவர்களை மட்டும் பாதிக்கவில்லை. இது அனைவரின் பொருளாதார நிலை மற்றும் மன வலிமையையும் பாதித்துள்ளது. இந்த சூழ்நிலையை எதிர்ப்பதற்கான சிறந்த வழி, வாழ்வை இழக்காமல் அமைதியாக இருந்து நேரத்தைக் கடப்பது மட்டுமே. அப்படிச் செய்யும் பட்சத்தில் மீதமுள்ள அனைத்தையும் சரியான நேரத்தில் குணப்படுத்த முடியும்! வீட்டிலேயே இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.