நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்து செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. மேலும், அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கரோனா சமயத்தில் உபயோகப்படுத்தும் முகக்கவசம் குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்..
"முழு ஊரடங்கிற்குப் பின்னும் கரோனா குறையாமல் தொடர, மக்கள் துணியால் ஆன முகக்கவசம் மட்டுமே அணிவதை முக்கியக் காரணமாக பார்க்கிறேன். துணிக் கவசம் 1% கூட வைரஸ் பரவலைத் தடுக்காது. சர்ஜிகல் மாஸ்க்கை கட்டாயமாக்கலே இதற்கான தீர்வாக முடியும் என நம்புகிறேன். விலைக் கட்டுப்பாடும் அவசியம்” என்றார்.