
தமிழ் சினிமா துறையின் முழு வேலை நிறுத்தம் காரணாமாக அனைத்து சினமா சம்பந்தம் பட்ட நிகழ்வுகளும் காலவரையின்றி நிறுத்திவைக்கபட்டுள்ள நிலையில் தற்போது இதன் காரணமாக பெப்சி சம்மேளத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அவர்களது அன்றாட பிழைப்பை கூட நடத்த முடியாமல் அவதிப்படும் சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது கோடைக்காலம் என்பதால் தங்களது குழந்தைகளின் பள்ளிகளின் கட்டணத்தை கட்டாயம் கட்ட வேண்டிய சூழலும் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் நெருக்கடிக்கு ஆளான அவர்கள் கையில் சுத்தமாக பணமில்லாமல் தவித்து வருகிறார்கள்.இந்நிலையில், பெப்சி ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு தயாரிப்பாளரும், தயாரிப்பாளர் சங்க பொருளாளருமான எஸ்.ஆர்.பிரபு ரூபாய் பத்து லட்சத்தை பெப்சி தொழிளார்களுக்கு நிதியுதவி வழங்கியுள்ளார். இதேபோல் தயாரிப்பாளர்கள் பலரும் பெப்சி ஊழியர்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும் கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.