Skip to main content

"சில மருத்துவக் கும்பல் பாசத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது" - நடிகர் சூரி

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

soori talk about BATTERY Movie

 


ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி பேட்டரி என்ற படத்தை இயக்கியுள்ளார். செங்குட்டுவன், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இணைந்து இயக்குநர்கள் வெற்றிமாறன், மோகன் ராஜா, நடிகர் சூரி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

 

இதில் பேசிய நடிகர் சூரி, "இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அழைத்த லிங்குசாமி சாருக்கு நன்றி. தான் வெற்றியடைவது மட்டுமல்லாமல் தன்னுடன் அசோசியேட்டாக இருப்பவர்களும் வெற்றியடைய வேண்டும் என்று நினைக்கும் பெரிய மனது கொண்டவர். மணிபாரதி அண்ணன் அழைக்கும் போது நான் இந்த படத்திலும் நடிக்கவில்லை, இப்படத்தைப் பற்றி எதுவும் தெரியாது. ஆகையால் என்ன பேசுவது என்று கேட்டேன். இப்படத்தின் கதையை இயக்குநர் மணிபாரதி கூறும்போது, இது மாதிரியெல்லாம் இப்போது நடக்கிறதா? என்று கேட்டேன். ஆமாம் தம்பி என்றார். அவர் கதை கூறிய விதத்தைக் கேட்டு எனது கை மட்டும் நீளமாக இருந்திருந்தால் அங்கிருந்தே அவரை கட்டியணைத்திருப்பேன். ஒரு உயிருக்கு பிரச்சனை என்றால் கண்டிப்பாக காப்பாற்ற வேண்டும். அப்பா, அம்மா தம்பி என்று அவர்களுக்கு உயிர் போகும் அளவிற்கு பிரச்சனை என்றால் தவித்துவிடுவோம். ஒரு மனிதன் என்றைக்கு வேண்டுமானாலும் இறந்துவிடுவான். அந்த சூழ்நிலையில், ஒன்று கடவுளிடம் நிற்பான், இன்னொன்று மருத்துவரிடம் நிற்பான். அதுதான் உண்மை.அப்படி இருக்கும் பட்சத்தில் சில மருத்துவ கும்பல், நம்முடைய பாசத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறது. அதற்கு தீர்வு கொடுக்கும் படமாக இது இருக்கும்.

 

இன்றைய காலகட்டத்தில் மிகவும் தேவையான படம். இன்று இருக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் கலாய்க்கிறார்கள். அதேபோல், முழு படத்தையும் ஈடுபாட்டோடு பார்ப்பதில்லை. பெரிய இயக்குநர்களின் படங்களை அனைவரும் சுலபமாக பார்க்கிறார்கள். ஆனால், புது நடிகர்கள், இயக்குநர்களின் படங்களைப் பார்ப்பதற்கு தயங்குகிறார்கள். ஆனால், அனைவரும் இப்படத்தை பார்க்க வேண்டும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்