Skip to main content

ஸ்ரீலீலா செயலுக்கு பலரும் பாராட்டு

Published on 28/04/2025 | Edited on 28/04/2025
sreeleela adopted 3rd child

தென்னிந்திய அளவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஸ்ரீலீலா. இப்போது தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’, இந்தியில் கார்த்திக் ஆர்யனுடன் இன்னும் பெயரிடாத ஒரு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இப்படங்கள் மூலம் தமிழ் மற்றும் இந்தியில் அறிமுகமாகவுள்ளார். 

சினிமாவை தாண்டி தனிப்பட்ட வாழ்க்கையில் இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். 2022ஆம் ஆண்டு தனக்கு 21 வயதாக இருக்கும் போது ஒரு அனாதை ஆசிரமத்திற்கு சென்ற இவர் அங்கு அந்த இரண்டு குழந்தைகளை கண்டு தத்தெடுத்து வளர்த்து வருகிறார். தத்தெடுத்த போது அவருக்கு வயது 21 என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் மூன்றாவதாக ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இதனை தெரிவித்துள்ளார். இளம் வயதிலே குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கும் ஸ்ரீலீலாவுக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sreeleela (@sreeleela14)

சார்ந்த செய்திகள்