
சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ படத்தில் நடித்து முடித்துள்ளார். ஸ்டோன் பெஞ்ச் மற்றும் சூர்யாவின் 2டி நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிடோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கார்த்திக் சுப்பராஜின் ஆஸ்தான இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் மே 1ஆம் தேதி தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் வெளியாகவுள்ளது. ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் ஹைதராபாத்தைத் தொடர்ந்து கேரளாவில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய சூர்யா யாரும் சிகரெட் பிடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.
அவர் பேசியதாவது, “ஒரே ஒரு எச்சரிக்கை. படத்துக்காக மட்டும் தான் சிகரெட் அடிக்கிறேன். தயவு செய்து யாரும் வாழ்க்கையில் சிகரெட் அடிக்காதீங்க. ஆரம்பிச்சா விட முடியாது. ஒரு பஃப் தானேன்னு ஆரம்பிப்பீங்க. அப்புறம் விடவே முடியாது. அதை நான் ஆதரிக்கவும் மாட்டேன். அதனால் சிகரெட் பிடிக்காதீங்க” என்றார்.