Skip to main content

சூரி, விமல் மீது வனத்துறையினர் புகார்!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

soori vimal

 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்லவே உரிய அனுமதி பெற்று செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்தக் காலகட்டத்தில் எந்தவிதச் சுற்றுலாத் தலங்களும் இயங்கவில்லை.

 

இந்நிலையில் நடிகர் சூரியும், நடிகர் விமலும் கொடைக்கானலுக்குத் தடை உத்தரவை மீறி வந்ததாக புகார் எழுந்துள்ளது.

 

ஊரடங்கு காலத்தினால் தனது சொந்த ஊருக்குச் சென்று அங்கு குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் சூரி. அவ்வப்போது கிராமத்தில் இருக்கும் புகைப்படங்களைச் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவார்.

 

இந்த நிலையில் நடிகர்கள் சூரி, விமல் உள்ளிட்ட திரைப்பலங்கள் கொடைக்கானல் பேரிஜம் ஏரிப்பகுதியில் மீன்பிடித்தது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

 

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்த நிலையில் 2 பேர் மீன்பிடித்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

 

சார்ந்த செய்திகள்