Skip to main content

ஆஸ்கர் பட்டியல் வெளியீடு... ஏமாற்றத்தில் சூர்யா ரசிகர்கள்!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021

 

suriya

 

சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவான 'சூரரைப் போற்று' திரைப்படம் கடந்த ஆண்டு இறுதியில் ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, சூர்யாவின் திரைவாழ்க்கையில் முக்கியப் படமாகவும் இப்படம் அமைந்தது. இந்த நிலையில், ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படமும் இடம் பெற்றிப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. 

 

இப்பட்டியலில் மொத்தம் 366 திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. சிறந்த நடிகர், நடிகை, இசை, சிறந்த படம் உள்ளிட்ட பல பிரிவுகளில் இப்படம் போட்டியிட்டது. தற்போது, 92-ஆவது ஆஸ்கர் விருதுக்கான இறுதிக்கட்ட சுற்றில் நீடிக்கும் படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இப்பட்டியலில் சூரரைப் போற்று திரைப்படம் இடம் பெறவில்லை.

 

சூரரைப் போற்று திரைப்படம், ஏதாவது ஒரு பிரிவிலாவது ஆஸ்கர் விருதை வெல்லும் என்று எதிர்பார்த்திருந்த சூர்யா ரசிகர்களை, தற்போது வெளியாகியுள்ள இப்புதிய பட்டியல் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்